TNPSC Thervupettagam

அண்ணன் சீர் தங்கத் திட்டம்

October 7 , 2026 5 days 95 0
  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மணப்பெண்களுக்காக "அண்ணன் சீர்" என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் தகுதியான மணப்பெண்களுக்கு 8 கிராம் எடை கொண்ட 22 காரட் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும்.
  • ஆண்டு குடும்ப வருமான வரம்பு ₹2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டிற்கான முதல் தவணையாக ₹812 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
  • இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 05 முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 1998-இன் கீழ் திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் தங்கம் கொள்முதல் செய்யப்படும்.
  • தங்கத்தின் விலையானது கொள்முதல் செய்யப்படும் நாளில் இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கம் (IBJA) வெளியிடும் விலையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்