TNPSC Thervupettagam

அனைத்து மாவட்டங்களிலும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள்

November 7 , 2019 2101 days 664 0
  • நிர்பயா நிதியின் உதவியுடன் அனைத்து மாவட்டங்களிலும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகளை (Anti-Human Trafficking Units - AHTU) அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • தற்போது, நாட்டில் 146 மாவட்டங்களில் மட்டுமே AHTUகள் செயல்படுகின்றன.
  • இது பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும். மேலும் அவர்களிடையே இவை அதிகப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.
  • இந்திய அரசு தனது 2013 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிர்பயா நிதிக்கு 1000 கோடி ரூபாய் நிதியை அறிவித்துள்ளது. இந்நிதி அரசாங்கத்தின் சில  முன்முயற்சிகளையும் பெண்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் ஆதரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்