TNPSC Thervupettagam

அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கை

April 18 , 2026 3 days 64 0
  • மாறிவரும் தொழிலாளர் சந்தைகளில் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்குவது குறித்த அறிக்கையைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டது.
  • இந்த அறிக்கை "Universal social protection in changing labour markets: Protecting workers in all types of employment" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  • சமூகப் பாதுகாப்பு என்பது சுகாதாரப் பராமரிப்பு, வேலையின்மைக்கான ஆதரவு, மகப்பேறு பலன்கள் மற்றும் ஓய்வூதியம் போன்ற பலன்களை உள்ளடக்கியதாகும்.
  • வறுமையைக் குறைப்பது, பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளைக் களைவது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்