தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
வெள்ளை ஆப்பிரிக்கர்கள் தென்னாப்பிரிக்காவில் மிகவும் பணக்கார மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்களாக உள்ளனர்.
அந்நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதமாக உள்ளன அவர்கள் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான நிலத்தை வைத்திருக்கிறார்கள் மற்றும் பெரும்பாலான உயர் நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்டச் சொத்துடைமை/பறிமுதல் சட்டம் தென்னாப்பிரிக்க அரசாங்கத்தினை விதிவிலக்கான சூழ்நிலைகளில், இழப்பீடு இல்லாமல் ஒரு பொதுப் பயன்பாட்டிற்காக நிலத்தைக் கைப்பற்ற அனுமதிக்கிறது.
பிப்ரவரி மாதத்தில், டிரம்ப் ஆப்பிரிக்கர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.