TNPSC Thervupettagam

அமெரிக்கா மற்றும் யுனெஸ்கோ 2025

July 27 , 2025 3 days 37 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார முகமையான யுனெஸ்கோவை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • இது அதனுடன் மீண்டும் இணைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • இது 2017 ஆம் ஆண்டு டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீண்டும் மேற்கொள்ளப்படுவதைக் குறிக்கிறது.
  • அதை 2023 ஆம் ஆண்டில் அதிபர் ஜோ பைடன் மாற்றியமைத்தார்.
  • இந்த முடிவு "America First" என்ற அதன் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கிறது.
  • அமெரிக்கா யுனெஸ்கோவை விட்டு வெளியேறுவது இது மூன்றாவது முறையாகும்.
  • மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் போது இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
  • இந்த முடிவு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடைமுறைக்கு வரும்.
  • அமெரிக்கா முன்னர் 1984 ஆம் ஆண்டில் ரீகன் நிர்வாகத்தின் கீழ் யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியது.
  • ஜார்ஜ் W. புஷ் அதிபராக இருந்த போது 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்தது.
  • யுனெஸ்கோவின் நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்கா சுமார் 8% என்ற அளவிற்குப் பங்களிக்கிறது.
  • 2011 ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாகச் சேர்க்க யுனெஸ்கோ வாக்களித்தப் பின்னர் அமெரிக்காவும், இஸ்ரேலும் யுனெஸ்கோவிற்கு நிதியளிப்பதை நிறுத்தின.
  • யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்சின் பாரிஸில் அமைந்துள்ளது.
  • கல்வி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு மூலம் உலகளாவிய அமைதியை வளர்ப்பதற்காக இது 1945 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்