TNPSC Thervupettagam

அமெரிக்கா-வெனிசுலா எண்ணெய் ஒப்பந்தம்

August 31 , 2026 17 days 106 0
  • வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய்களுக்கும் மேலான எண்ணெய் இருப்புக்களின் மீது பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிவித்தது.
  • இந்த ஒப்பந்தம் 17 உத்திசார் எண்ணெய் வயல்களை உள்ளடக்கியது மற்றும் அமெரிக்காவிற்கு 100 ஆண்டுகளுக்கு இந்த இருப்புக்களை அணுகுவதற்கான அனுமதியை வழங்கக் கூடும்.
  • இந்த இருப்புக்கள் வெனிசுலாவின் மதிப்பிடப்பட்ட 303 பில்லியன் பீப்பாய்கள் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களில் ஐந்தில் ஒரு பங்கைக் குறிக்கின்றன.
  • இந்த ஒப்பந்தம் 100 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் 209 பில்லியன் டாலர் வரியை உருவாக்கும் என்று வெனிசுலா மதிப்பிட்டுள்ளது.
  • உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்து வரும் நிலையிலும் மற்றும் அமெரிக்க எண்ணெய் இருப்புக்கள் குறைந்து வரும் நிலையிலும் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்