TNPSC Thervupettagam

அயோத்தியாப் பிரச்சனை

May 10 , 2019 2206 days 699 0
  • அயோத்தியாப் பிரச்சனை குறித்து ஆராய இந்திய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 3 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவானது மே 06 அன்று தனது இடைக்கால அறிக்கையை ஒரு மூடப்பட்ட உறையில் வைத்து இந்திய உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.
  • இந்தக் குழுவின் அறிக்கை அதன் முயற்சியில் தோல்வி அடைந்தது எனில் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு இது குறித்து மேலும் விசாரிக்கும்.
  • 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிரான மனுக்களின் மீது உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். அலகாபாத் உயர்நீதிமன்றம் 2.77 ஏக்கர் கொண்ட இந்த பிரச்சினைக்குரிய நிலத்தைப் பின்வரும் 3 பிரிவினர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
    • நிர்மோகி அக்ஹாரா பிரிவு
    • சன்னி மத்திய வக்ஃபு வாரியம், உத்தரப் பிரதேசம்
    • ராம்லாலா விரஜ்மான் கடவுள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்