அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை (திருத்த) மசோதா, 2021
March 23 , 2021 1575 days 645 0
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சில சாதியினருக்கு என்று சில விதி விலக்குகளுடன் “தேவேந்திர வேளாளர்” என்ற பெயரின் கீழ் ஏழு சாதிகளை உள்ளிடுவதற்கு இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அவை தேவேந்திர குலத்தான், கடையன், கள்ளடி, குடும்பன், பள்ளன், பன்னாடி மற்றும் வைத்திரியன் ஆகியனவாகும்.
இம்மசோதா தமிழ்நாட்டிலுள்ள பட்டியலிடப்பட்ட சாதியினர் பட்டியலை மாற்றி அமைப்பதற்காக அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை 1950 என்ற ஆணையினைத் திருத்தி அமைக்க உள்ளது.
இம்மசோதாவினை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அறிமுகப் படுத்தியது.
அரசியலமைப்புச் சட்டமானது வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பட்டியலிடப்பட்ட சாதியினர்களை குறிப்பிடுவதற்கு வேண்டி குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கிறது.
மேலும், அறிவிக்கப்பட்ட அந்த பட்டியலின சாதியினர் பட்டியலைத் திருத்தி அமைக்க பாராளுமன்றத்திற்கு அனுமதி அளிக்கிறது.