TNPSC Thervupettagam

அவசர சிகிச்சைக்கான உரிமை

June 1 , 2026 14 days 153 0
  • அவசர சிகிச்சைக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் 21-வது சரத்தின் கீழ் உள்ள 'வாழும் உரிமை'-யின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • அனைத்து மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் 112 அவசர உதவி எண்ணைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்குள் Good Samaritan குறைதீர்க்கும் முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • விபத்து மற்றும் அவசர சிகிச்சை பாதிப்புகளுக்கான தேசிய மருத்துவ மீட்பு நெறி முறையை வெளியிட மத்திய அரசுக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், அதனை மூன்று மாதங்களுக்குள் அமல்படுத்துமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டது.
  • அனைத்து பொது மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களும் AIS-125 தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் 112 உதவி எண்ணுடன் இணைக்கப்பட்ட GPS அடிப்படையிலான கண்காணிப்புடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் அவசர சிகிச்சைப் பதிவேடுகளை உருவாக்கவும், அவற்றை ஒருங்கிணைந்த தேசிய அவசர சிகிச்சைப் பதிவேட்டுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டது.
  • Good Samaritan பாதுகாப்புச் சட்டங்கள், PM RAHAT பணமில்லா சிகிச்சைத் திட்டம் மற்றும் அவசரக்கால உதவிச் சேவைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்