TNPSC Thervupettagam

ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு ஏற்றுமதி

October 4 , 2026 2 days 40 0
  • இந்தியா 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 நிலவரப்படி தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை ஏற்றுமதி செய்துள்ளது.
  • ஆகாஷ் என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர எறிகணை அமைப்பாகும், இது தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.
  • இது பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.
  • ஆகாஷ் அமைப்பைப் பெற்ற முதல் வெளிநாட்டு வாடிக்கையாளர் அர்மேனியா ஆகும்.
  • இந்த அமைப்பு போர் விமானங்கள், சீர்வேக எறிகணைகள், வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) தாக்கக் கூடியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்