TNPSC Thervupettagam

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2025

November 6 , 2025 7 days 114 0
  • பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 13 தங்கம், 18 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் உட்பட இந்தியா 48 பதக்கங்களை வென்றது.
  • மகளிர் கபடி அணி ஈரான் அணியைத் தோற்கடித்து இந்த விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றது.
  • பிரதீஸ்மிதா போய் மகளிருக்கான 44 கிலோ பளுத்தூக்குதல் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் உலக இளையோர் சாதனையைப் படைத்து தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார்.
  • மகளிருக்கான குராஷ் போட்டியில் வெண்கலம் வென்ற குஷி இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்றார்.
  • ரஞ்சனா யாதவ் 5000 மீட்டர் பந்தயத்தில் (வேகநடை) வெள்ளி வென்று இந்தியாவின் முதல் தடகளப் பதக்கத்தை வென்றார்.
  • இந்தப் பதக்க எண்ணிக்கையானது, செனகலின் டாக்கரில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய விளையாட்டு வீரர்களைத் தகுதிப் பெறச் செய்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்