ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை ஆயுஷ் கட்டமைப்புத் திட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுஷ் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக வேண்டி ஆயுஷ் அமைச்சகத்திற்கு 3 ஆண்டு காலத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தனது தொழில்நுட்ப உதவியை வழங்கும்.
இந்த ஒப்பந்தமானது 2019 ஆம் ஆண்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும்.
ஆயுஷ் கட்டமைப்புத் திட்டமானது, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான ஒரு ஆதரவு அமைப்பினை உருவாக்குவதற்காக 2018 ஆம் ஆண்டில் ஆயுஷ் அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டது.