புதிய அமைப்பின் ஒரு பகுதியாக, பதப்படுத்தப்பட்டு பொதியிலடைக்கப்பட்டச் சரக்குப் பொருட்களில் ஆரோக்கிய நட்சத்திர தரநிலைக் குறியீடானது பதிக்கப்படும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் கூறியுள்ளது.
ஒரு பதப்படுத்தப்பட்ட சரக்குப் பொதியில், அது ஆரோக்கியமானதா இல்லையா என்பதைக் குறிக்கும் வகையில் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அளவில் பதிக்கப்படும்.
உணவில் உள்ள கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றின் அளவைக் கொண்டு இந்தத் தரநிலைக்கான மதிப்பீடானது மேற்கொள்ளப்படும்.