இந்தியச் சிறைச்சாலைகளின் புள்ளி விவரங்கள் (PSI) 2023 அறிக்கை
October 3 , 2025 21 days 53 0
தேசியக் குற்றப் பதிவுகள் வாரியமானது (NCRB) 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியச் சிறைச் சாலைகளின் புள்ளி விவரங்கள் அறிக்கையினை வெளியிட்டது.
2022 ஆம் ஆண்டில் 5,73,220 ஆக இருந்த இந்தியாவின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 5,30,333 ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இதில் சரிவு இருந்த போதிலும், தேசிய சராசரிச் சிறைச்சாலை ஆக்கிரமிப்பு விகிதம் 120.8% ஆக அதிகமாகவே இருந்தது.
டெல்லியில் அதிகபட்சமாக 200% ஆகவும், தெலுங்கானாவில் மிகக் குறைவாக 72.8% ஆகவும் பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, மொத்த கைதிகளில் 73.5% விசாரணைக் கைதிகள் (3.84 லட்சம்) எண்ணிக்கையுடன் இந்தியாவில் 1,332 சிறைகளில் 5.3 லட்சம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் அதிக விசாரணைக் கைதிகள் (சுமார் 73,000) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பீகார் (46,000+) மற்றும் மகாராஷ்டிரா (32,000+) ஆகியவை உள்ளன என்பதோடு பெரும்பாலோனோர் மாவட்ட மற்றும் மத்தியச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்.
டெல்லியின் 10,026 சிறைகளில் 20,077 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் உத்தரப் பிரதேச சிறைகளில் அதன் 65,866 கைதிகள் அடைக்கப் படுவதற்கான திறனைத் தாண்டி, 98,849 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு சிறைகளில் மொத்தம் 1,972 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பதில் அவற்றுள் 1,787 இயற்கை மற்றும் 150 இயற்கைக்கு மாறானவை.
இங்கு தற்கொலைகள் மூலமாக முக்கியமாக தூக்கிட்டுக் கொள்ளுதல் மூலமானவை 96 இறப்புகளுக்குக் காரணமாக அமைந்தன.
பஞ்சாபில் இயற்கைக்கு மாறான மரணங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டில் 145 பேர் மரண தண்டனை பெற்றதுடன், உத்தரப் பிரதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அதிகமாகும்.