TNPSC Thervupettagam

இந்தியச் சிறைச்சாலைகளின் புள்ளி விவரங்கள் (PSI) 2023 அறிக்கை

October 3 , 2025 21 days 51 0
  • தேசியக் குற்றப் பதிவுகள் வாரியமானது (NCRB) 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியச் சிறைச் சாலைகளின் புள்ளி விவரங்கள் அறிக்கையினை வெளியிட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் 5,73,220 ஆக இருந்த இந்தியாவின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 5,30,333 ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
  • இதில் சரிவு இருந்த போதிலும், தேசிய சராசரிச் சிறைச்சாலை ஆக்கிரமிப்பு விகிதம் 120.8% ஆக அதிகமாகவே இருந்தது.
  • டெல்லியில் அதிகபட்சமாக 200% ஆகவும், தெலுங்கானாவில் மிகக் குறைவாக 72.8% ஆகவும் பதிவாகியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, மொத்த கைதிகளில் 73.5% விசாரணைக் கைதிகள் (3.84 லட்சம்) எண்ணிக்கையுடன் இந்தியாவில் 1,332 சிறைகளில் 5.3 லட்சம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • உத்தரப் பிரதேசத்தில் அதிக விசாரணைக் கைதிகள் (சுமார் 73,000) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • அதைத் தொடர்ந்து பீகார் (46,000+) மற்றும் மகாராஷ்டிரா (32,000+) ஆகியவை உள்ளன என்பதோடு பெரும்பாலோனோர் மாவட்ட மற்றும் மத்தியச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்.
  • டெல்லியின் 10,026 சிறைகளில் 20,077 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் உத்தரப் பிரதேச சிறைகளில் அதன் 65,866 கைதிகள் அடைக்கப் படுவதற்கான திறனைத் தாண்டி, 98,849 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • இங்கு சிறைகளில் மொத்தம் 1,972 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பதில் அவற்றுள் 1,787 இயற்கை மற்றும் 150 இயற்கைக்கு மாறானவை.
  • இங்கு தற்கொலைகள் மூலமாக முக்கியமாக தூக்கிட்டுக் கொள்ளுதல் மூலமானவை 96 இறப்புகளுக்குக் காரணமாக அமைந்தன.
  • பஞ்சாபில் இயற்கைக்கு மாறான மரணங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில் 145 பேர் மரண தண்டனை பெற்றதுடன், உத்தரப் பிரதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்