இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து உருவாக்கம் பற்றிய அறிக்கைகள்
February 27 , 2022 1401 days 549 0
இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து உருவாக்கம் மற்றும் அதன் வழங்கீடு பற்றி போட்டித் திறன் நிறுவனம் தயாரித்த 2 அறிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மான்டவ்யா வெளியிட்டார்.
இந்த அறிக்கையானது, மாபெரும் வயது வந்தோருக்கான தடுப்பு மருந்து வழங்கீட்டு இயக்கம் வெற்றி பெறுவதில் மத்திய, மாநில மற்றும் மாவட்ட நிலைகளிலான ஒருங்கிணைந்தச் செயல்பாடுகள் எவ்வாறு உதவின என்பது பற்றி கூறுகிறது.
இந்தியாவின் அதிகபட்சம் பயன்படுத்தப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகளாவன; பாரத் பயோடெக் நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு / ஆஸ்ட்ராசெனிகா என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்திய சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கோவிசீல்டு ஆகியனவாகும்.