இந்தியாவின் நீள் வெட்டு ரீதியிலான வயது முதிர்ச்சி தொடர்பான ஆய்வு
January 12 , 2021 2008 days 904 0
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் இந்தியாவின் நீள் வெட்டு ரீதியில் (Longitudinal Ageing Study of India - LASI) வயது முதிர்ச்சி தொடர்பான ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளார்.
இது இந்தியாவின் மக்கள் தொகையில் மூத்த மக்களால் ஏற்படும் பொருளாதார, சுகாதார மற்றும் சமூகத் தீர்வுகள் மற்றும் விளைவுகள் குறித்த அறிவியல்சார் ஆய்வின் முழு அளவிலான ஒரு தேசிய ஆய்வாகும்.
இந்த அறிக்கையானது முதியோர்களுக்கு வேண்டி தேசிய மற்றும் மாநில அளவிலான திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கான ஒரு அடிப்படையை அளிக்க உள்ளது.
இது மத்திய சுகாதார & குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய முதியவர்கள் சுகாதார நலத் திட்டத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது மும்பையில் உள்ள சர்வதேச மக்கள் தொகை அறிவியல் மையத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
முதியோர்களுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுப்பதற்கான இந்தியாவின் முதலாவது மற்றும் உலகின் மிகப்பெரிய ஆய்வு இதுவாகும்.
இது இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் (சிக்கிம் மாநிலத்தைத் தவிர்த்து) மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
இந்தியாவில் 2050 ஆம் ஆண்டில் 319 மில்லியன் அளவில் மூத்தக் குடிமக்கள் இருப்பர், இது 2011 ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பினால் அடையாளம் காணப் பட்டுள்ள முதியோர்களை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இதில் 75% முதியோர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் நாள்பட்ட நோய்களாலும் 40% முதியோர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் உடல் குறைபாடுகளாலும் 20% முதியோர்கள் மன நலமின்மையாலும் பாதிக்கப் பட்டு இருப்பர்.