TNPSC Thervupettagam

இந்தியாவின் புதைபடிமம் சாரா எரிபொருள் அடைந்த உச்சம்

January 8 , 2022 1220 days 546 0
  • 2030 ஆம் ஆண்டிற்கு மிக முன்னதாகவே தனது புதைபடிமம் சாராத ஒரு எரிபொருள் இலக்கினை இந்தியா அடைந்துள்ளதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
  • 21வது பங்குதாரர்கள் மாநாட்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த ஆற்றல் திறனில் 40% திறனைப் புதைபடிமம் சாரா மூலங்களைச் சார்ந்து உருவாக்கும் என இந்தியா உறுதி பூண்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை அடைவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்தது.
  • ஆனால் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்த இலக்கை இந்தியா எட்டியது.
  • இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மொத்த மின்சார உற்பத்தித் திறன் 392.01 GW ஆகும்.
  • இதில், புதைபடிமம் சாரா எரிபொருள் சார்ந்த ஆற்றல்திறன் 157.32GW ஆகும்.
  • இது 392.01 GW திறனில் துல்லியமாக 40.1% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்