TNPSC Thervupettagam

இந்தியாவின் புலி எண்ணிக்கை 2026

August 5 , 2026 4 days 67 0
  • உலகில் உள்ள மொத்த காட்டுப் புலிகளில் சுமார் 70 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா, உலகின் மிகப்பெரிய காட்டுப் புலிகள் எண்ணிக்கையைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது.
  • ராஜஸ்தானின் ஐந்து புலிகள் காப்பகங்களில் புலிகளின் எண்ணிக்கை 149-ஆக உயர்ந்துள்ளது; இதில் ரந்தம்பூர் காப்பகத்தில் மட்டும் 72 புலிகள் உள்ளன.
  • புலிகளின் இனப்பெருக்கம் மற்றும் குட்டிகளின் உயிர்வாழும் விகிதம் ஆகியவற்றில், இந்தியாவின் மிகச் சிறந்த புலிகள் காப்பகங்களில் ஒன்றாக ரந்தம்பூர் விளங்குகிறது.
  • ரந்தம்பூரில் புலிகளின் உயிர்வாழும் விகிதம் சுமார் 80 சதவீதமாக உள்ளது; இது நாட்டின் முக்கிய புலிகள் காப்பகங்களில் பதிவான மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும்.
  • 2008-ஆம் ஆண்டில் சரிஸ்கா காப்பகம் தனது அனைத்துப் புலிகளையும் இழந்தபோது, ​​ரந்தம்பூரைச் சேர்ந்த 'மச்லி' (Machli) என்ற பெண் புலியின் வழித்தோன்றல்களைக் கொண்டு அங்கு மீண்டும் புலிகள் குடியேற்றப்பட்டன.
  • புலிகளை அறிவியல் பூர்வமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றியமைத்த உலகின் முதல் நிகழ்வாக சரிஸ்கா புலிகள் காப்பகம் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
  • ஒரு காலத்தில் புலிகள் முற்றிலும் அழிந்துபோயிருந்த சரிஸ்கா காப்பகத்தில், தற்போது 53 புலிகள் வசிக்கின்றன.
  • இது புலிகளை அறிவியல் பூர்வமாக மீண்டும் அறிமுகப்படுத்திய உலகின் முதல் வெற்றிகரமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
  • இந்தியாவின் "புலிகள் மாநிலம்" (Tiger State) என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், இந்த ஆண்டில் மட்டும் 45 புலிகள் உயிரிழந்துள்ளன; இது நாட்டின் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 40 சதவீதமாகும்.
  • 2022-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் அதிகபட்சமாக 785 புலிகளைக் கொண்டிருந்ததாகப் பதிவு செய்தது.
  • 20 மாநிலங்களை உள்ளடக்கிய 'அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு (2022)'-இன் படி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682-ஆக உள்ளது.
  • 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' (Project Tiger), புலிகள் வாழும் 18 மாநிலங்களில் 58 புலிகள் காப்பகங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
  • இக்காப்பகங்கள் சுமார் 84,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன; இது இந்தியாவின் மொத்தப் புவியியல் பரப்பளவில் சுமார் 2.56 சதவீதமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்