இந்தியாவின் முதல் பல்முனை முனையம்
November 14 , 2018
2456 days
810
- பிரதமர் வாரணாசியில் கங்கை ஆற்றில் நாட்டின் முதல் பல்முனை முனையத்தை திறந்து வைத்தார்.
- இது நான்கு பல்முனை முனையங்களில் முதலாவதாகும்.
- கங்கை ஆற்றின் முதல் பல்முனை நீர்வழி முனையமானது மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- இது வாரணாசிக்கும் ஹால்தியாவிற்கும் இடையிலான தூரத்தை பெரிய கப்பல்கள் செல்லும் அளவிற்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
- தேசிய நீர்வழிப்பாதை - 1 (ஹால்தியா - வாரணாசி) ஆனது உலக வங்கியின் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு (5369.18 கோடி) இந்திய அரசு மற்றும் உலக வங்கியால் சமமாக பகிர்ந்து செலவழிக்கப்பட உள்ளது.
Post Views:
810