2018ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியானது முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போர் நிறுத்தம் கையொப்பமிடப்பட்ட 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
பிரெஞ்சுத் தலைநகரான பாரிசில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்க் டே திரியோம்பி என்ற இடத்தில் நடைபெற்ற போர் நிறுத்த நூற்றாண்டு நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் கலந்து கொண்டார்.
மேலும் முதலாம் உலகப் போரில் இறந்த ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வடக்கு பிரான்சில் இந்தியாவால் கட்டப்பட்டுள்ள முதல் போர் நினைவகத்தை இவர் திறந்து வைத்தார்.
1914 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இந்தியப் படைகள் மேற்கு போர் முனையில் முதல் யேப்ரஸ் போரில் பங்கேற்றன.