TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்ள மிகவும் மாசுபட்ட நகரம்

January 15 , 2023 947 days 1281 0
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி அறிவிக்கப் பட்டது.
  • இது பாதுகாப்பான வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக PM2.5 துகளை கொண்டு இருந்ததோடு, இது மூன்றாவது அதிகபட்சச் சராசரி PM10 செறிவு கொண்ட நகரமாக விளங்குகிறது.
  • இது 2019 ஆம் ஆண்டில் பதிவான ஒரு கன மீட்டருக்கு 108 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்த PM2.5 மாசுபாடு ஆனது 2022 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 99.71 மைக்ரோகிராம் என்ற அளவில் குறைந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் அது 7 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.
  • ஹரியானாவின் ஃபரிதாபாத் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
  • தேசிய தூய்மைக் காற்று திட்டமானது (NCAP) 2024 ஆம் ஆண்டிற்குள் மாசுபாட்டின் அளவினை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைப்பதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் 102 நகரங்களில் காணப்படும் PM2.5 மற்றும் PM10 என்ற மாசுபாடுகளின் அளவுகளை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைப்பதற்காக மத்திய அரசானது தேசிய தூய்மைக் காற்று திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
  • தேசியத் தூய்மைக் காற்று திட்டத்திற்கான அடிப்படை ஆண்டாக 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்