TNPSC Thervupettagam

இந்தியாவில் கலவை எரிபொருள் மின்சார மகிழுந்து

October 21 , 2022 1019 days 450 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், நிதின் கட்காரி டொயோட்டா கரோலா ஆல்டிஸ் எனும் கலவை எரிபொருள் மின்சார மகிழுந்தினை அறிமுகப்படுத்தினார்.
  • இந்தியாவில் கலவை எரிபொருள் மூலம் இயங்கும் வலுவான கலப்பின மின்சார வாகனம் (FFV-SHEV) தொடர்பான முதல் முன்னோடித் திட்டமாக இது அறிவிக்கப் பட்டு உள்ளது.
  • இந்தத் திட்டம் எத்தனால் மூலம் இயங்கும் கலவை எரிபொருள் ரக வாகனங்கள் இந்தியச் சூழ்நிலையில் சாத்தியமானதா என்பதை ஆய்வு செய்ய முயல்கிறது.
  • கலவை எரிபொருள் ரக மகிழுந்துகள் எத்தனால், பெட்ரோல் அல்லது பெட்ரோல் மற்றும் எத்தனாலின் கலவை உள்ளிட்ட நெகிழ்திறன் மிக்க எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டது.
  • இந்த வாகனங்கள் எந்திரத்தின் எரிபொருளை பெட்ரோலில் இருந்து எத்தனாலுக்கு மாற்றுவதற்கான நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது.
  • இந்த வாகனங்கள் மின்கலங்கள் மூலம் எந்திரத்தினை இயக்கி, எந்திரத்திலிருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்