இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 33.54% பேர் வளர்ச்சி குன்றியவர்கள் என்று அரசாங்கத் தரவு காட்டுகிறது.
போஷன் டிராக்கரை (நிகழ்நேர ஊட்டச்சத்து கண்காணிப்பு அமைப்பு) பயன்படுத்தி 6.44 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளிடமிருந்து மதிப்பீடுகள் எடுக்கப்பட்டன.
NFHS-5 (தேசியக் குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5, 2019–21) ஆனது முன்னதாக 35.5% பேர் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களாகவும் மற்றும் 32.1% பேர் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் உள்ளவர்களாகவும் இருப்பதாக அறிவித்தது.
போஷன் டிராக்கர் ஆனது, வளர்ச்சிக் குறைபாடு, உடல் மெலிதல் மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் உள்ளவர்களைக் கண்காணிக்க 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது.
மிஷன் போஷன் 2.0 திட்டத்தில் அங்கன்வாடி சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை மேம்படுத்துவதற்கான போஷன் அபியான் ஆகியவை அடங்கும்.