இந்தியாவில் சிறுத்தைகள் மீண்டும் அறிமுகம்
May 26 , 2021
1519 days
714
- 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவில் சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
- இந்தியாவில் 1947 ஆம் ஆண்டில் தான் கடைசி சிறுத்தை கண்டறியப்பட்டது.
- அது இறந்த பிறகு 1952 ஆம் ஆண்டில் சிறுத்தையானது அழிந்துவிட்ட இனமாக இந்தியாவில் அறிவிக்கப் பட்டது.
- இந்தியாவில் ஆப்பிரிக்கச் சிறுத்தைகளை அவற்றிற்கு உகந்த வாழிடத்தில் அறிமுகம் செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
- சிறுத்தை மறு அறிமுகத் திட்டமானது இந்திய வனவிலங்கு நிறுவனத்தினால் (Wildlife Institute of India) உருவாக்கப் பட்டது.
Post Views:
714