TNPSC Thervupettagam

இந்தியாவில் வன உரிமைகள்

September 4 , 2025 2 days 39 0
  • Securing Rights, Enabling Futures: Policy Lessons from Forest Rights Act and Future Pathways என்ற தலைப்பிலான இந்த 2025 ஆம் ஆண்டு அறிக்கையானது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அறக்கட்டளையுடன் இணைந்து UNDP இந்திய அமைப்பினால் வெளியிடப் பட்டது.
  • 2006 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம் (FRA) ஆனது, இந்தியாவில் உள்ள வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினச் சமூகங்களின் உரிமைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆய்வு ஆனது ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்கள்தொகை கொண்ட மூன்று இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்துகிறது.
  • 2019 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவினால் (IPCC) குறிப்பிட்டது படி, உலகளவில், சமூக நில உரிமைகள் ஆனது மேம்பட்ட வன நிர்வாகம், பருவநிலை நெகிழ்திறன் மற்றும் கார்பன் குறைப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நிலவரப்படி, 25,11,375 உரிமைகள் FRA சட்டத்தின் கீழ் வழங்கப் பட்டுள்ளன என்பதோடு இதில் 23.2 மில்லியன் ஏக்கர் வன நிலம் அடங்கும்.
  • இதில் தனிநபரின் கீழ் 5.07 மில்லியன் ஏக்கர் மற்றும் சமூக உரிமைகளின் கீழ் 18.19 மில்லியன் ஏக்கர் அடங்கும்.
  • பழங்குடியின விவகார அமைச்சகம் (MoTA) ஆனது தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் (DA-JGUA) திட்டத்தின் கீழ் பயிற்சி, கண்காணிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் FRA செயல்படுத்தலை ஆதரிக்கிறது.
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஆனது FRA செயல்படுத்தலை ஆதரிக்கவும், அதனை மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒன்றிணைக்கவும் MoTA மற்றும் ஆறு மாநில அரசாங்கங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்