Securing Rights, Enabling Futures: Policy Lessons from Forest Rights Act and Future Pathways என்ற தலைப்பிலான இந்த 2025 ஆம் ஆண்டு அறிக்கையானது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அறக்கட்டளையுடன் இணைந்து UNDP இந்திய அமைப்பினால் வெளியிடப் பட்டது.
2006 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம் (FRA) ஆனது, இந்தியாவில் உள்ள வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினச் சமூகங்களின் உரிமைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வு ஆனது ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்கள்தொகை கொண்ட மூன்று இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்துகிறது.
2019 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவினால் (IPCC) குறிப்பிட்டது படி, உலகளவில், சமூக நில உரிமைகள் ஆனது மேம்பட்ட வன நிர்வாகம், பருவநிலை நெகிழ்திறன் மற்றும் கார்பன் குறைப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நிலவரப்படி, 25,11,375 உரிமைகள் FRA சட்டத்தின் கீழ் வழங்கப் பட்டுள்ளன என்பதோடு இதில் 23.2 மில்லியன் ஏக்கர் வன நிலம் அடங்கும்.
இதில் தனிநபரின் கீழ் 5.07 மில்லியன் ஏக்கர் மற்றும் சமூக உரிமைகளின் கீழ் 18.19 மில்லியன் ஏக்கர் அடங்கும்.
பழங்குடியின விவகார அமைச்சகம் (MoTA) ஆனது தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் (DA-JGUA) திட்டத்தின் கீழ் பயிற்சி, கண்காணிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் FRA செயல்படுத்தலை ஆதரிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஆனது FRA செயல்படுத்தலை ஆதரிக்கவும், அதனை மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒன்றிணைக்கவும் MoTA மற்றும் ஆறு மாநில அரசாங்கங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.