கலாச்சார அமைச்சகமானது கூகுள் நிறுவனத்துடன் இணைந்து “இந்தியா கி உடான்” எனும் முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் அசைக்க முடியாத மற்றும் அழியாதத் தரத்தினையும் அதன் சாதனைகளையும் கொண்டாடுவதற்கான ஒரு முயற்சியாகும்.
கூகுள் நிறுவனம் அதன் வளமான தகவல் காப்பகங்கள் மூலமாகவும், கலை சார்ந்த விளக்கப் படங்கள் மூலமாகவும் இந்தியாவின் வளமானக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை நோக்கிக் குடிமக்களை அழைத்துச் செல்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கருத்துரு, ‘கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் அசைக்க முடியாத மற்றும் அழியாத தரம்' என்பதாகும்.
இது கூகுள் நிறுவனத்தின் கலை மற்றும் கலாச்சாரத் துறையினால் செயல்படுத்தப் படுகிறது.