இந்திய-பர்மா ராம்சர் பிராந்திய முன்னெடுப்பு (IBRRI) ஆனது கம்போடியா, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு (லாவோ PDR), மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றின் ராம்சர் தேசிய மைய அமைப்புகளால் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆசியப் பிராந்திய அலுவலகத்துடன் இணைந்து உருவாக்கப் பட்டது.
இந்த முன்னெடுப்பினை IUCN அமைப்பின் நதிப் பேச்சுவார்த்தை மற்றும் ஆளுகை கட்டமைப்புத் திட்டம் (BRIDGE) ஆதரிக்கிறது.
ஒருங்கிணைந்தப் பிராந்திய நடவடிக்கையின் மூலம் ராம்சர் உடன்படிக்கையின் மூலோபாயத் திட்டத்தின் நோக்கங்களை செயல்படுத்துவதை IBRRI நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராம்சர் உடன்படிக்கைக்கான பங்குதார நாடுகளின் மாநாட்டின் (COP15) பதினைந்தாவது கூட்டத்தில், IBRRI ஆனது 2025 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான அதன் மூலோபாயத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டமானது உறுப்பினர் நாடுகளில் ஈரநில இழப்பை நிறுத்தவும், மாற்றி அமைக்கவும் ஒரு பன்னாட்டுக் கட்டமைப்பை அமைக்கிறது.