இந்தியா மற்றும் இஸ்ரேல் - தூதரக உறவுகளின் 30வது ஆண்டு விழா
January 27 , 2022 1291 days 559 0
இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப் பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இரு நாடுகளும் நினைவு முத்திரை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இந்த முத்திரையில், தாவீத் நட்சத்திரம் மற்றும் அசோகச் சக்கரம் ஆகியவையும் இரு தரப்பு உறவுகளின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 30 என்ற எண்ணும் இடம் பெற்றுள்ளன.
1992 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதியன்று இஸ்ரேலும் இந்தியாவும் தங்களது தூதரக உறவுகளை நிறுவின.