April 11 , 2021
1555 days
692
- உலகின் முக்கிய ஆற்றல் மற்றும் தொழில்துறை அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தியா H2 கூட்டணி எனப்படும் ஒரு புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
- இக்கூட்டணியை அமைப்பதற்கான முன்னெடுப்பினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் சார்ட் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொடங்கியுள்ளன.
- இந்த இந்தியா H2 கூட்டணி (IH2A) முக்கியமாக ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குதலில் ஈடுபாடு செலுத்தும்.
- இது இந்தியாவில் ஹைட்ரஜன் சார்ந்த பொருளாதாரம் மற்றும் பொருள் வழங்கீட்டுச் சங்கிலி அமைப்புகளை ஊக்குவிப்பதற்காக பணியாற்றும்.
முக்கிய நோக்கங்கள்
- இந்தியாவில் ஹைட்ரஜன் சார்ந்த பொருளாதாரம் மற்றும் வழங்கீட்டு அமைப்பை உருவாக்குதல்.
- நீல மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்தல் மற்றும் சேமித்தல் போன்றவற்றை மேம்படுத்துதல்.
- ஹைட்ரஜன் பயன்படுத்தும் தொழிற்சாலைப் பகுதிகளை உருவாக்குதல்.
- ஹைட்ரஜனால் ஆற்றலூட்டப்பட்ட கலன்களால் இயங்கும் போக்குவரத்தினை அதிகரித்தல்.
Post Views:
692