2020 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று பிரதமர் மோடி அவர்கள் 6வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை (IISF - India International Science Festival) தொடங்கி வைத்தார்.
இந்தத் திருவிழாவின் கருத்துரு, ”தன்னிறைவு இந்தியா மற்றும் உலக நலனிற்கான அறிவியல்” என்பதாகும்.
விக்யான் யாத்திரையானது IISF-2020 விழாவினை முன்னிட்டு அறிவியல் மனப்பான்மையை அதிகரிப்பதற்காக வேண்டி டிசம்பர் 14 அன்று தொடங்கி வைக்கப் பட்டது.
இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், உயிரித் தொழில்நுட்பத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகம், விஜ்னானா பாரதி என்ற ஒரு அறிவியல் நிறுவனம் ஆகியவற்றினால் கருத்தாக்கம் செய்யப் பட்டது.
இதன் நோக்கம் அன்றாட வாழ்வில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும்.