இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை/சுகாதார ஆராய்ச்சித் துறைக் கொள்கை
March 2 , 2022 1252 days 576 0
மருத்துவ வல்லுநர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவம், பல்மருத்துவம் ஆகிய துறைகளின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது உயிரி மருத்துவப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு மீதான இந்திய மருத்துவ ஆராய்ச்சி / சுகாதார ஆராய்ச்சித் துறைக் கொள்கையினை வெளியிட்டுள்ளது.
இந்தக் கொள்கையானது, உள்நாட்டிலேயே தயாரித்தல், புத்தாக்க நிறுவனம் இந்தியா திட்டம் மற்றும் ஆத்ம நிர்பர் பாரத் முன்னெடுப்புகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பல்துறை ஒத்துழைப்பினை உறுதி செய்து, புத்தாக்க நிறுவனக் கலாச்சாரத்தினை ஊக்குவித்து, புத்தாக்கம் சார்ந்த ஒரு சூழலமைவினை உருவாக்கும்.