இந்திய விளம்பரங்களில் பாலினப் பாரபட்சம் மற்றும் உள்ளடக்கம்
April 30 , 2021 1597 days 514 0
யுனிசெப் மற்றும் ஊடக பாலினப் பாரபட்சம் மீதான கீனா திவாஸ் நிறுவனம் ஆகியவற்றால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை இதுவாகும்.
இதில் 2019 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்ட 1000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் யூடியூப் விளம்பரங்கள் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது.
இன்று வரை இந்திய விளம்பரங்களில் பெண்களை நிற ரீதியாகவும், கவர்ச்சி ரீதியாகவும் குறிப்பிடுவதோடு அவர்களை வீட்டைத் தவிர தொழில்சார்ந்த அல்லது மற்ற எந்தவொரு ஆசைகளும் இல்லாதவர்களாகவே குறிப்பிடுகின்றனர்.
விளம்பரங்களில் பெண்களைத் தவறாகவும் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும் அவர்ளைக் குறிப்பிடுவது பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பெரும் பாதிப்பினை உண்டாக்குகிறது.