இந்தத்திட்டமானது சமீபத்தில் இராஜஸ்தான் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது இந்த மாநிலத்தில் சோதனை அடிப்படையில் 4 மாவட்டத்தில் செயல்படுத்த இருக்கிறது.
இந்தத்திட்டமானது மாநிலத்தில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறிகாட்டிகள் மற்றும் தாய்மார்களிடையே இரத்தசோகை ஆகியவை சராசரியை விட மிக மோசமாக இருக்கும் உதய்ப்பூர், பிரதாப்கார், பன்ஸ்வாரா மற்றும் துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
இது ஒரு மகப்பேறு உதவித் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டாவது குழந்தைப் பிறப்பிற்காக ரூ.6000 கொடுக்கப்பட இருக்கின்றது.
இந்தத்திட்டமானது முதலாவது குழந்தைப் பிறப்பிற்காக ரூ.5000 வழங்கப்படும் மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரூ வந்தனா யோஜனா என்ற திட்டத்துடன் ஒன்றிப் பொருந்துகின்றது.
PMMVY பற்றி
இது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்காகத் தொடங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஒரு நிதியுதவித் திட்டமாகும்.
இது குழந்தைப் பிறப்பின் போது மற்றும் குழந்தைப் பராமரிப்பின் போது ஏற்படும் ஊதிய இழப்பிற்காக பெண்களுக்குப் பகுதியளவு இழப்பீட்டுத் தொகையை வழங்குகின்றது. மேலும் இது பாதுகாப்பான பிரசவத்திற்கான சூழ்நிலை, சிறந்த ஊட்டச்சத்து மற்றும் சிறந்த பாலூட்டும் நடைமுறைகள் ஆகியவற்றையும் வழங்குகின்றது.