TNPSC Thervupettagam

இன்வெஸ்ட் இந்தியா

December 12 , 2020 1623 days 587 0
  • சமீபத்தில் ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பானது (UNCTAD - United Nations Conference on Trade and Development) ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருது – 2020 என்ற விருதின் வெற்றியாளராக “இன்வெஸ்ட் இந்தியாவை” அறிவித்து உள்ளது.
  • இந்த விருது வழங்கும் விழாவானது UNCTAD அமைப்பின் தலைமையகமான ஜெனீவாவில் நடைபெற்றது.
  • ஐக்கிய நாடுகளின் இந்த விருதானது உலகில் உள்ள சிறந்த நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனங்களின் தலைசிறந்த சாதனைகளை அங்கீகரித்து அனுசரிக்கின்றது.
  • இன்வெஸ்ட் இந்தியா ஆனது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் கீழ் 2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • இது இந்திய முதலீட்டாளர்களுக்கு முதன்மை ஆதரவுத் தளமாகச் செயல்படும் ஒரு தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு நிறுவனமாகும்.
  • இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்