TNPSC Thervupettagam

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி

August 7 , 2025 8 days 114 0
  • 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு உண்மையான பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில் தமிழகம் 11.19% என்ற அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து ள்ளது.
  • மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி இந்தத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் குறிக்கப்பட்ட கணிப்பை இது சுமார் 2.2% என்ற விகிதத்தில் தாண்டியுள்ளது.
  • 2010-11 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 13.12% என்ற அளவிலான வளர்ச்சிப் பதிவானது என்பதோடு தற்செயலாக, இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், திமுக கட்சியே இங்கு ஆட்சியில் இருந்தது.
  • பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அடிப்படை ஆண்டு 2004-05 ஆக நிர்ணயிக்கப் பட்டது, ஆனால் அது தற்போது 2011-12 ஆகும்.
  • மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் துறைகளின் வலுவான செயல்திறனால் தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டது.
  • சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, மாநிலத்தின் வாரியான முன்கூட்டிய மதிப்பீடுகள் வெளியிடப் பட்ட போது, தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 9.69% ஆக இருந்தது.
  • ஆனால் சமீபத்தியப் புள்ளிவிவரம் அதன் வளர்ச்சியில் சுமார் 1.5 சதவீதப் புள்ளிகளின் அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • முதலிடத்தைப் பிடித்ததோடு, வேறு எந்த மாநிலமும் எட்டாத இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து தமிழ்நாடு சாதனையைப் படைத்துள்ளது.
  • கோவா, குஜராத் மற்றும் நான்கு வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 14.5% ஆக வளரும் என்று கணிப்பதில் மாநில அரசு மிதமாக இருந்தது.
  • இந்தக் கணிப்பு உண்மையான வளர்ச்சி 9% ஆகவும் சராசரி பணவீக்கம் 5% ஆகவும் குறிக்கப்பட்டது.
  • ஆனால் உண்மையான வளர்ச்சி சுமார் 2.2% அதிகமாகும்.
  • நிலையான விலையில் (அடிப்படை ஆண்டு: 2011-12), தமிழ்நாட்டின் GSDP 2024-25 ஆம் ஆண்டில் 17,32,189 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு இது 2023-24 ஆம் ஆண்டில் 15,57,821 கோடி ரூபாயாக இருந்தது.
  • உண்மையான GSDP வளர்ச்சி 8.23% என்ற அளவிலிருந்து 9.26% ஆக உயர்த்தப் பட்டது என்பதுடன், திருத்தப் பட்டப் புள்ளி விவரங்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கான வலுவான செயல்திறனையும் சுட்டியுள்ளது.
  • இருப்பினும், 2022-23 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வளர்ச்சி 8.13% என்ற அளவில் இருந்து 6.17% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • நடப்பாண்டு விலைகளில் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (NSDP) குறித்த தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் 3,61,619 ரூபாய் என்ற மதிப்பிடப்பட்ட தனிநபர் வருமானத்துடன் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்து உள்ளது.
  • இது தெலுங்கானா (3,87,623 ரூபாய்) மற்றும் கர்நாடகா (3,80,906 ரூபாய்) ஆகியவற்றைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்