TNPSC Thervupettagam

இரண்டாவது பழமையான உருண்டைப்பாறை கண்டுபிடிப்பு - மத்தியப் பிரதேசம்

July 25 , 2026 3 days 71 0
  • மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பிச்சோர் உருண்டை கிரானைட் (Pichhore orbicular granite) பாறையை, சுமார் 2.56 பில்லியன் ஆண்டுகள் பழமையான, உலகின் இரண்டாவது பழமையான அறியப்பட்ட உருண்டைப்பாறையாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • குட்டாவலி கிராமத்திற்கு அருகே காணப்பட்ட இப்பாறை, இந்தியாவின் பழமையான புவியியல் தொகுதிகளில் ஒன்றான பண்டேல்கண்ட் நிலையான பகுதி/கிராட்டனைச் சேர்ந்தது.
  • பழங்காலப் பாறைகளை ஆய்வு செய்யப் பயன்படும் யுரேனியம்-லீட் (U-Pb) சிர்கான் காலக் கணிப்பு முறையைப் பயன்படுத்தி இதன் வயது தீர்மானிக்கப்பட்டது.
  • உருண்டை கிரானைட்டில் முக்கியமாக குவார்ட்ஸ் மற்றும் ஃபெல்ட்ஸ்பாரால் ஆன ஆர்பிக்யூல்ஸ் (orbicules) எனப்படும் கோள அமைப்புகள் உள்ளன, அவை பெரும்பாலும் செறிவான அடுக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும்.
  • ஆரம்பகாலப் பூமியின் வரலாற்றில் பழங்கால கண்ட மேலோட்டத்தின் மறு சுழற்சியைக் குறிக்கும் வகையில், 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான மரபுவழி சிர்கான் படிகங்களை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்