இராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆனது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
இது இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினக் கொண்டாட்டம் அவரது 150வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் முக்கிய தேசிய அளவிலான நிகழ்வு நடைபெற்றது.
டெல்லியில் ஒரு மாபெரும்/முக்கிய நிகழ்ச்சி உட்பட நாடு தழுவிய அளவில் "Run for Unity" மாரத்தான் நடைபெற்றது.
My Bharat/எனது பாரத் தளத்தில் இளையோர் விவகார அமைச்சகத்தினால் தொடங்கப் பட்ட "சர்தார்@150 ஒற்றுமை மார்ச் (யாத்ரா)", இளைஞர்களிடையே தேசபக்தி மற்றும் குடிமைப் பொறுப்பை ஊக்குவித்தது.