இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் இரண்டும் சமீபத்தில் ஒரு இருதரப்புப் புத்தாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளின் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்காக புதுமை, விரைவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரோபாட்டிக்ஸ், ட்ரோன்கள், குவாண்டம் டெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை வெளிக் கொணர இரு நாடுகளின் தொழிலகங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.