மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் “இ-சஞ்சீவினி” மற்றும் “இ-சஞ்சீவினிஒபிடி”தளங்கள் குறித்து மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றுடனான ஒரு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார்.
இ-சஞ்சீவினி மற்றும் இ-சஞ்சீவினிஒபிடி ஆகியவற்றினால்வழங்கப்படும் தொலைதூர மருத்துவ ஆலோசனையானது 23 மாநிலங்களில் செயல்படுத்தப் பட்டு வருகின்றது. மற்ற மாநிலங்கள் இதைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இதனை அமல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இதைத் செயல்படுத்துவதில் ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் மாநில அளவிலான ஆலோசனை வழங்குதலில் நாகப்பட்டினம் முதலிடத்தில் உள்ளது.
இது இணையத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான தொலைதூர மருத்துவத் தீர்வாகும்.
இந்த இ-சஞ்சீவினி தளமானது மருத்துவர்-மருத்துவர் (இ-சஞ்சீவினி) மற்றும் நோயாளி-மருத்துவர் (இ-சஞ்சீவினிஒபிடி) தொலைதூர மருத்துவ ஆலோசனை எனப்படும் 2 வகையான தொலைதூர மருத்துவச் சேவைகளை வழங்குகின்றது.
இது ஊரகப் பகுதிகள் மற்றும் தொலைதூரச் சமூகங்களில் இருக்கும் டிஜிட்டல் பிளவை இணைப்பதன் மூலம் அனைவருக்கும் சமமான சுகாதாரச் சேவைகளைவழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.