இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இ-சவானி தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
இதைப் பயன்படுத்தி, கன்டோன்மென்ட் பகுதிகளில் வசிப்பவர்கள் குடிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.
கன்டோன்மென்ட் வாரியமானது ஒரு குடிமை நிர்வாக அமைப்பாகும்.
இது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
கன்டோன்மென்ட் சட்டம் - 2006 என்ற சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அலுவல் ரீதியான உறுப்பினர்கள் மற்றும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரால் இந்த வாரியமானது அமைக்கப் பட்டுள்ளது.