2021 ஆம் ஆண்டு உலகக் கூட்டுறவு கண்காணிப்பு அறிக்கையானது சர்வதேசக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு & சமூக நிறுவனங்கள் மீதான ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவுஎன்ற நிறுவனமானது உலகின் 300 முன்னணி கூட்டுறவு நிறுவனங்களில் முதலாவது கூட்டுறவு நிறுவனமாக தரப்படுத்தப் பட்டு உள்ளது.
இந்தத் தரவரிசையானது தனி நிறுவன மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் விற்பனை அளவிற்கும் உள்ள விகிதத்தின் அடிப்படையில் ஆனதாகும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமானது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கச் செய்கிறது என்பதை இது குறிக்கிறது.