TNPSC Thervupettagam

உலகளாவிய உணவு நெருக்கடிகள் அறிக்கை 2026

May 1 , 2026 2 days 102 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் Global Network Against Food Crises எனும் அமைப்பால் 10-வது உலகளாவிய உணவு நெருக்கடிகள் அறிக்கை (GRFC) வெளியிடப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டில், 47 நாடுகளில் உள்ள 266 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர், இது அவர்களின் மக்கள்தொகையில் 22.9% ஆகும் மற்றும் 2024-ஆம் ஆண்டினை விட அதிகமாகும்.
  • ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாட்டின் (IPC) 5-வது கட்டத்தின் கீழ், 6 பிராந்தியங்களில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் பேரழிவு நிலையில் இருந்தனர், இது 2016-ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட கடுமையான உயர்வாகும்.
  • 32 நாடுகளில் 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவசர நிலையில் (IPC கட்டம் 4) இருந்தனர், அதே நேரத்தில் காசா மற்றும் சூடானில் பஞ்சம் (IPC கட்டம் 5) ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மோதல்கள், தீவிர வானிலை மற்றும் பொருளாதார அதிர்ச்சிகள் ஆகியவை இதன் முக்கிய காரணங்களாகும், மேலும் பாதிக்கப்பட்ட மக்களில் 80%-க்கும் அதிகமானோர் நீண்டகால நெருக்கடி பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • சுமார் 35.5 மில்லியன் குழந்தைகளும் 9.2 மில்லியன் பெண்களும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொண்ட, அதேவேளையில் உணவு ஆதரவிற்கான நிதியுதவி 2016–17 ஆம் ஆண்டளவுகளுக்குக் குறைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்