TNPSC Thervupettagam

உலகளாவிய சமத்துவமின்மை நெருக்கடி

November 8 , 2025 13 days 52 0
  • இந்தியாவின் செல்வந்தர்களான 1% பேர் 2000 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் செல்வத்தை 62% அதிகரித்துள்ளதாக G20 அறிக்கை தெரிவிக்கிறது.
  • உலகளவில், முன்னணி 1% செல்வந்தர்கள் 2000 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் உருவாக்கப் பட்ட அனைத்து புதிய செல்வங்களிலும் 41% வளத்தினைக் கைப்பற்றினர் அதே நேரத்தில் மனிதகுலத்தின் கீழ் நிலையில் உள்ள பாதி பேர் 1% வளத்தினை மட்டுமே பெற்றனர்.
  • சீனா மற்றும் இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட சில நாடுகள், தனி நபர் வருமானத்தை அதிகரிப்பதன் காரணமாக நாடுகளுக்கு இடையேயான சமத்துவமின்மையைக் குறைத்துள்ளன.
  • பாதிக்கும் மேற்பட்ட உலக நாடுகளில், 1% செல்வந்தர்கள் தங்கள் செல்வ வளத்தின் பங்கை அதிகரித்து, உலக மக்கள்தொகையில் 74% பேரை உள்ளடக்கியதாக உள்ளனர்.
  • இந்தியாவில், மேல் நிலையில் உள்ள 1% பேர் தங்கள் செல்வ வளத்தின் பங்கை 62% அதிகரித்தனர், அதே நேரத்தில் சீனாவில் அது 54% வளர்ச்சியடைந்தது.
  • அதிக சமத்துவமின்மை உள்ள நாடுகள் ஜனநாயக வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏழு மடங்கு அதிகமாகும்.
  • 2020 ஆம் ஆண்டு முதல், உலகளாவிய வறுமைக் குறைப்பு குறைந்துள்ளது அல்லது தலைகீழாக மாறியுள்ளது.
  • தற்போது, ​​2.3 பில்லியன் மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
  • உலக மக்கள்தொகையில் பாதி பேர் இன்னும் அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பெறவில்லை என்பதோடு மேலும் 1.3 பில்லியன் மக்கள் தங்கள் கைப்பிடிப்பிலிருந்து (சேமிப்பினை) செலவழிக்கும் சுகாதாரச் செலவுகளால் வறிய நிலையில் உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்