TNPSC Thervupettagam

உலகளாவிய நோய் பாதிப்பு ஆய்வு 2023

October 18 , 2025 6 days 42 0
  • 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுட்காலம் பெண்களுக்கு 76.3 ஆண்டுகள் மற்றும் ஆண்களுக்கு 71.5 ஆண்டுகள் ஆகும்.
  • 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1950 ஆம் ஆண்டு முதல் வயது சார்ந்து தரநிலைப் படுத்தப் பட்ட இறப்பு விகிதம் 67% குறைந்துள்ளது.
  • தொற்று அல்லாத நோய்கள் (NCD) ஆனது மொத்த உலகளாவிய இறப்புகள் மற்றும் குறைபாடுகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை ஏற்படுத்துகின்றன.
  • உலகளாவிய இறப்புகள் மற்றும் குறைபாடுகளில் சுமார் பாதியளவு 88 மாற்றி அமைக்கக் கூடிய ஆபத்து காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில் இறப்புக்கான முக்கிய காரணமாக இருந்த COVID-19 ஆனது 2023 ஆம் ஆண்டில் 20 வது இடத்திற்கு சரிந்தது.
  • இந்தியா இஸ்கிமிக் இதய நோய், பக்கவாதம் மற்றும் நாள்பட்ட சுவாச நோய்களின் அதிக பாதிப்பினை எதிர்கொள்கிறது.
  • காற்று மாசுபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இந்தியாவில் முக்கிய சுகாதார அபாயங்களாகவே உள்ளன.
  • தொற்று நோய்களைக் குறைப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதிகரித்து வரும் NCD தொற்றுகளுடன் தொடர்ந்து போராடி வருகிறது.
  • இது 'தி லான்செட்' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்