TNPSC Thervupettagam

உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம்

March 21 , 2021 1579 days 787 0
  • செனாப் மேம்பாலம், இந்தியாவிலுள்ள  ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கலுக்கும் கவுரிக்கும் இடையில் இந்திய இரயில்வேயினால் கட்டப்பட்டு வரும்  ஒரு எஃகு மற்றும் கான்கிரீட் வளைவு மேம்பாலமாகும்.
  • ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் உலகின் இந்த மிக உயரமான இரயில் பாலம் அதன் கடைசி கட்டக் கட்டுமானப் பணி நிலையில்  உள்ளது.
  • இந்த இரயில் பாதை பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானதாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • கட்டி முடிக்கப் பட்ட பிறகு, இது சீனாவில் உள்ள பீப்பன் நதியிலமைந்த  சுய்பாய் இரயில் பாலத்தின் (275 மீ) சாதனையை முறியடிக்கும்.
  • இது செனாப் நதிப் படுகையிலிருந்து  359 மீட்டர் உயரத்தில் இருக்கும்.
  • இந்தப் பாலத்தின் ஒட்டு மொத்த நீளம் 1,315 மீட்டர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்