மணிப்பூர் மாநிலம் வன் தன் விகாஸ் யோஜனாவுக்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
வன் தன் விகாஸ் யோஜனா என்பது சிறு வன உற்பத்திப் பொருட்களின் மதிப்புக் கூட்டல், அடையாளக் குறியிடுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான ஒரு திட்டமாகும்.
வன் தன் திட்டம், உள்ளூரில் வாழும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் ஒரு முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ள நிலையில் மணிப்பூரானது இதில் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது
வன் தன் திட்டம், பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனம் (TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India Limited) ஆகியவற்றின் ஒரு முயற்சி ஆகும்.