TNPSC Thervupettagam

உலகின் மிக உயர்ந்த ரயில்பாதை

October 29 , 2018 2458 days 761 0
  • புதுடெல்லி மற்றும் லடாக் நகரங்களை இந்திய-சீன எல்லைப்பகுதி வழியாக செல்லக்கூடிய ஒரு ரயில்பாதையின் வழியாக இணைக்கும் திட்டத்தை இந்தியன் இரயில்வே அறிவித்துள்ளது.
  • அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் இயக்கப்படும்போது பிலாஸ்பூர்- மணாலி- லே பாதையானது உலகின் மிக உயர்ந்த ரயில் பாதையாக இருக்கும்.
  • சீனாவின் குவான்காய்-திபெத் ரயில்பாதையின் 2000 மீட்டர் உயர அளவை ஒப்பிடுகையில் இது கடல் மட்டத்திலிருந்து 5360 மீட்டர் உயரத்தில் அமையவுள்ளது.
  • இத்திட்டம் முடிவடைந்த பின்பு, டெல்லி முதல் லே வரையிலான 40 மணிநேர பயணநேரமானது 20 மணி நேரமாக குறையும்.

குறிப்பு

  • இப்பாதையில் 3000 மீட்டர் உயரத்தில் இந்தியாவில் முதலாவதாக சுரங்கப் பாதையினுள் கெய்லாங் இரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்