உயிரியல் தயாரிப்புகள் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு அவற்றின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் உலக உயிரியல் பொருளாதார சங்கத்தால் இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க உயிரியல் வளங்களிலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தயாரிக்கப்படும் தயாரிப்புகளான உயிரியல் தயாரிப்புகள் புதை படிவ அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு மாற்றாகவோ அல்லது துணைப் பொருளாகவோ அமைகின்றன.
உயிரியல் தயாரிப்புகள் புதைபடிவ வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும், சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும், கழிவுகளைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதன் மூலமும் உயிரியல் பொருளாதாரத்தை ஆதரிக்கின்றன.
2026 ஆம் ஆண்டுப் பிரச்சாரமானது Bioproducts are everywhere – often without us even noticing என்ற செய்தியை முன்னிலைப்படுத்தியது.